காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், சூர்யா இணைந்து நடித்த ’பிரண்ட்ஸ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி தற்கொலைக்கு முயன்றார்.
தனது மரணத்திற்குப் பின் சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முகநூல் நேரலையில் தெரிவித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் விஜயலட்சுமியின் உறவினர்கள் அவரை காப்பாற்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் விஜயலட்சுமி தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். தனக்கு மூச்சுவிடவே மூச்சு விடவே சிரமமாக இருக்கும் நிலையிலும் மருத்துவமனையில் இருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் என்றும் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் எனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் எனக்கு பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்றும் நான் நாடகம் எதுவும் போடவில்லை என்று கூறிய விஜயலட்சுமி, காயத்ரி ரகுராம் என் அனுமதி இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார் என்றும் அன்று தனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தற்போது என்னுடன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
காயத்ரி ரகுராம் மீது திடீரென நடிகை விஜயலட்சுமி வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com