close
Choose your channels

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகான காதல்..! விஜயலட்சுமியின் வீடியோ தொகுப்பு..!

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை விஜயலட்சுமி கடந்த ஒரு வருடமாக தினமும் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ், என்ன ஒரு அழகான காதல் என்று கமெண்ட் அளித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விஜயலட்சுமி, இயக்குனர் ஃபெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது தெரிந்ததே.

நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கடந்த ஒரு ஆண்டாக தினமும் தனது கணவர் வீட்டுக்கு வரும்போது கேட் வாசலில் நின்று நின்று அவருக்கு சல்யூட் அடித்து வரவேற்கும் காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அவரது கணவர் காரில் இருந்து கொண்டே அதை வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோவை தொகுப்பை தான் தற்போது விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார்.

இந்த தொகுப்பில் விஜயலட்சுமி கூறிய போது ’ஒவ்வொரு முறையும் நான் அவருக்காக வாசல் கேட்டை திறக்கும் போது ஒரு பெரிய புன்னகையுடன் அவருக்கு சல்யூட் அடிப்பேன். இதை நான் விரும்பி ஒரு வருடத்திற்கு மேலாக செய்து வருகிறேன். அதற்காக நாங்கள் மின்சார கேட் நிறுவும் யோசனையை கைவிட்டோம்.

இதனை எனது கணவர் ஃபெரோஸ் பதிவு செய்ய ஆரம்பித்தார், இந்த புன்னகையும் காதல் அதிர்வுகளும் கேமராவுக்கு உருவாக்கப்படவில்லை, அவருக்காகவே ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டது. இந்த தருணங்களை உருவாக்க எங்களுக்கு மெழுகுவர்த்தியோ இரவு உணவுகளோ தேவையில்லை, காதலுக்கு இரண்டு இதயங்கள் மட்டும் இருந்தால் போதும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள், ஒரு உண்மையான மேஜிக் உங்களுக்கு தெரியும்’ என்று கூறியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment