தமிழ பாரம்பரியத்துக்கு எதிராக கையெழுத்திட்ட நாயகிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழர்களின் வீர விளையாட்டு என்று கூறப்படும் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தடையை நீக்க வேண்டும் என தமிழ் கலாச்சார ஆர்வலர்களும், தமிழக அரசியல் கட்சியும் வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அதுமட்டுமின்றி இந்த விளையாட்டை பார்வையிடுபவர்களும் காளையை அடக்கும் வீரர்களும் பலியாகுதல், படுகாயம் அடைதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருவதாலும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கூடாது என விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைகள் ஒரு மனுவாக எழுதப்பட்டு அதில் பிரபலங்களிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கையில் பீட்டா (PETA) ஈடுபட்டு வருகின்றது. இந்த மனுவில் ரஜினியின் நாயகிகளான சோனாக்ஷி சின்ஹா, எமிஜாக்சன் உள்பட வித்யா பாலன், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி, ரவீனா தாண்டன், ஜாக்குலின் பெர்னான்டஸ், ரிச்சா சதா, நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சோனு சூட், வித்யூத் ஜம்வால், ததானி, கபில் சர்மா ஆதித்யா ஷெட்டி உள்பட பல பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com