தமிழ பாரம்பரியத்துக்கு எதிராக கையெழுத்திட்ட நாயகிகள்

  • IndiaGlitz, [Wednesday,December 16 2015]

தமிழர்களின் வீர விளையாட்டு என்று கூறப்படும் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தடையை நீக்க வேண்டும் என தமிழ் கலாச்சார ஆர்வலர்களும், தமிழக அரசியல் கட்சியும் வலியுறுத்தி வருகின்றது.


இந்நிலையில் ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அதுமட்டுமின்றி இந்த விளையாட்டை பார்வையிடுபவர்களும் காளையை அடக்கும் வீரர்களும் பலியாகுதல், படுகாயம் அடைதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருவதாலும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கூடாது என விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைகள் ஒரு மனுவாக எழுதப்பட்டு அதில் பிரபலங்களிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கையில் பீட்டா (PETA) ஈடுபட்டு வருகின்றது. இந்த மனுவில் ரஜினியின் நாயகிகளான சோனாக்ஷி சின்ஹா, எமிஜாக்சன் உள்பட வித்யா பாலன், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி, ரவீனா தாண்டன், ஜாக்குலின் பெர்னான்டஸ், ரிச்சா சதா, நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சோனு சூட், வித்யூத் ஜம்வால், ததானி, கபில் சர்மா ஆதித்யா ஷெட்டி உள்பட பல பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

More News

இன்று ஒரே நாளில் நயன்தாராவின் 2 படங்களின் பூஜை

2015ஆம் ஆண்டு நயன்தாராவின் பொற்காலம் என்றே கூறலாம். அவர் நடித்த 'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' ...

'அஞ்சல' படத்திற்காக 'டீ' போடும் சினிமா பிரபலங்கள்

விமல், நந்திதா நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கியுள்ள 'அஞ்சல' படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது..

விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபு

கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, பண்டரிபாய் நடித்த 'மன்னன்' திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்....

நான் ஓடி ஒளியற ஆள் இல்லை - 'பீப் பாடல்' நடவடிக்கை குறித்து சிம்பு

சிம்பு-அனிருத் இணைந்து தயாரித்த 'பீப் பாடல்' குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில்...

இன்று முதல் 'எந்திரன் 2' படப்பிடிப்பு ஆரம்பம். ஷங்கரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

பாகுபலி' ரிலீசுக்கு முன்புவரை தென்னிந்தியாவின் அதிக வசூல் பெற்ற படம் என்ற புகழை பெற்றிருந்த 'எந்திரன்'...