தனுஷின் 'மாரி 2' படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு நாயகிகள் ஏற்கனவே நடித்து வரும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார்.

விஜய் இயக்கிய 'சைவம்', 'பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க 2', 'அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை வித்யா பிரதீப் தற்போது 'மாரி 2' படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை வித்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகத்திற்கு நன்றி கூறிய கமல்

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வாரம் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

3500 ஒளியாண்டு தொலைவிற்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்

இங்கிலாந்து நாட்டின் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர் என்பது தெரிந்ததே.

பேரறிவாளனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணமா? 'கலக்க போவது யாரு' நவீன் விளக்கம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாகவும்

'காலா' படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் 'விசுவாசம்'

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது.