பாலிவுட் முன்னணி நடிகையின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வித்யா பாலன் சிறந்த நடிப்புக்காக தொடர்ந்து பாராட்டப் படுகிறார். திரைப்படங்களைத் தவிர சில விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் இவர் பேஷன் விஷயங்களிலும் அலாதி பிரியம் கொண்டவர். இவர் அணியும் காஞ்சிபுரம் புடவை முதல் அனைத்து உடைகளும் தொடர்ந்து கவனம் பெறும் அளவிற்கு அமைந்து இருக்கின்றன.
அந்த வகையில் நடிகை வித்யா பாலன் தற்போது எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகின்றன. இந்தி, மலையாள மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் முதல் முறையாக கடந்த ஆண்டு தமிழில் வெளியான “நேர்க்கொண்ட பார்வை“ படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இந்தப் படத்திற்கு முன்பே ரன், மனசெல்லாம் போன்ற படங்களுக்கு இவரை தமிழ் இயக்குநர்கள் அணுகியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை, சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் என்ற அடையாளத்துடன் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்நிலையில் அவருடைய இன்ஸ்டா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments