30 கிலோ எடைக்குறைப்பு: லாக்டவுனை சரியாக பயன்படுத்திய காமெடி நடிகை 

  • IndiaGlitz, [Wednesday,June 24 2020]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக அறிமுகம் அறிமுகமானார் நடிகை வித்யூலேகா. இவரது நகைச்சுவை நடிப்பும் குண்டான உடலும் ரசிகர்களை கவர்ந்தது என்று கூறலாம். இருப்பினும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் அவரது குண்டான உடலை கேலி செய்ததாகவும், ரசிகர்கள் சிலரும் சமூக வலைத்தளங்களில் தனது உடல் எடை குறித்து கிண்டல் செய்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகள் அனைவரும் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வந்த நிலையில் வித்யூலேகா மட்டும் உருப்படியான ஒரு வேலையை செய்துள்ளார். கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான தன்னுடைய உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். இந்த லாக்டவுன் முடிவதற்குள் 30 கிலோ வரை உடல் எடையை அவர் குறைக்க முடிவு செய்தார்

இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்போது அவர் தனது டார்கெட்டை எட்டியுள்ளார். இதற்கு முன் இருந்த வித்யூவுக்கும் இப்போது இருக்கும் வித்யூவுக்கும் அடையாளமே தெரியாத அளவில் ஸ்லிம் ஆக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’நான் குண்டாக இருப்பதை பார்த்து என்னிடம் பலர் கேள்வி கேட்டார்கள். வாழ்க்கை முழுவதும் இப்படி உண்டாகவே இருந்து விடப் போகிறாயா என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள். இதனை அடுத்து நான் தன்னம்பிக்கையுடன் எனது உடல் எடையை குறைக்க முடிவு செய்தேன். இதற்காக நான் வாரத்தில் ஆறு நாட்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தேன். சரியான பேலன்ஸ் உணவுகளை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கடின உழைப்புக்கு நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது. நான் மட்டும் இன்றி ஒவ்வொருவரும் வாரம் 6 நாட்கள் கட்டாய உடற்பயிற்சி செய்து, சரியான உணவு எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் எடை குறைப்பு சாத்தியம் தான்

வாழ்க்கையில் எதுவும் எளிதாக கிடைத்து விடாது. ஆனால் கடின முயற்சிக்கு பின் நமக்கு கிடைக்கும் ரிசல்ட்டை பார்க்கும்போது நான் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போகும். இப்போது என்னுடைய எடை 68 கிலோ தான் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்