மாலத்தீவு கடற்கரையில் குட்டித் தூக்கம் போடும் முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Monday,March 29 2021]
நடிகை காஜல் அகர்வால் துவக்கி வைத்த மாலத்தீவு மேனியா இன்னும் முடிவிற்கே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாலத்தீவில், நடிகை காஜலின் தேனிலவு சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து பலரும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, தமிழின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் மாலத்தீவில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் “பரதேசி”, “முனி’‘, “காளை” போன்ற படங்களில் நடித்து ஒரு காலத்தில் தமிழின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை வேதிகா. அவரும் தற்போது மாலத்தீவு கடற்கரையில் படுத்துக் கொண்டு உறங்குவது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் கேப்ஷனில் “உங்களுக்குள் இருக்கும் அலைகளின் ஒலியை கேளுங்கள்” என்று தத்துவ வார்த்தைகளையும் உதிர்த்து இருக்கிறார்.
நடிகை வேதிகா கடந்த நவம்பர் மாதத்திலேயே மாலத்தீவுக்கு சென்று விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி அதை, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது மீண்டும் மாலத்தீவுக்கு படையெடுத்து இருக்கும் அவர் அங்குள்ள கடற்கரை மணலில் சாவகாசமாக படுத்து உறங்குவது போல புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.