சென்னை மக்களுக்கு நடிகை வேதிகா கூறிய முக்கிய அறிவுரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’முனி’ ’காஞ்சனா 3’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் மூலம் சென்னை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் அதாவது கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தான் சென்னையில் இருந்ததாகவும் அப்போது சென்னை மக்களை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். நான் பார்த்தவரையில் சென்னை தெருக்களில் உள்ளவர்கள் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை என்றும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஒவ்வொருவரின் உடல் நலம் மிகவும் முக்கியம் என்றும் எனவே இந்த நேரத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை மக்களுக்கு அவர் கூறிய இந்த அறிவுரை குறித்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
I was shocked when I was in Chennai in Feb/March.I literally saw no one on the streets wear a mask. My humble request, please mask up (in case u do not)If you r being responsible by wearing ur masks correctly then kudos to u. Easy to be a Superhero these days just mask up??????
— Vedhika (@Vedhika4u) May 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments