தலைகீழாக வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் வரலட்சுமி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,July 05 2022]

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தலைகீழாக வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான சிம்புவின் ’போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் அவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்

இந்த நிலையில் சற்று முன்னர் வரலட்சுமி தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக அவர் Practice makes Perfect...jesttttt be jollyyyyy.... என பதிவு செய்துள்ளார்.