ராயல் என்ஃபீல்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டும் நடிகை வரலட்சுமி.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வரலட்சுமி ராயல் என்ஃபீல்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கும் சில மனத்தடைகள் இருந்தது. ஆனால் அந்த பயத்தை போக்கி பைக் ஓட்ட கற்றுக்கொள்ள இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தேன்.
ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் சைக்கிள், ஸ்கூட்டி என்று தொடங்கி தற்போது புல்லட் வரை வந்து உள்ளேன். முதலில் எனக்கு கொஞ்சம் கவலை, பயம் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதற்கு பிறகு என்னுடைய பயிற்சியாளர் மிகச் சிறந்த முறையில் எனக்கு கற்றுக் கொடுத்தார். பெண்கள் தங்கள் பயத்தை நோக்கி அவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை, சாதிக்க விரும்புவதை சாதித்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று.
நாங்கள் கீழே விழுந்தாலும் கற்றுக் கொண்டோம், பயம் வந்தாலும் சவாரி செய்தோம், எப்படி முன்னேறுவது என்பதை கற்றுக் கொண்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com