நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்: செம க்யூட் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக தளபதி விஜய் நேற்று சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றார்.
இந்த நிலையில் விமானத்தில் அவருடைய பக்கத்து சீட்டில் நடிகை வரலட்சுமி அமர்ந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் தனது பக்கத்து சீட்டு பயணி என்ற தகவல் தெரிந்ததும் நடிகை வரலட்சுமி இன்ப அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.
இதனை அடுத்து தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து விஜய்யுடன் ஹைதராபாத் வரை பயணம் செய்வது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
தளபதி விஜய்யுடன் நடிகர் வரலட்சுமி ’சர்கார்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பதும், ‘வாரிசு’ படத்தில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Never had such a good flight to hyd...haha my favoriteeeeeeee #Thalapathy @actorvijay right next to me..whaatteew day...thank u @Jagadishbliss heheheh....so much fun...ludo..laughter..chit chat..perfect flight..perfect day.. pic.twitter.com/dX9cDLdtw1
— ?????????????????? ?????????????????????? (@varusarath5) August 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments