ஓபிஎஸ்-நடிகை வரலட்சுமி திடீர் சந்திப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையும் சரத்குமார் அவர்களின் மகளுமான வரலட்சுமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களிடம் வரலட்சுமி கோரிக்கை வைத்தார். மேலும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களையும் சந்தித்து இதே கோரிக்கையை வைத்ததாக நடிகை வரலட்சுமி பேட்டியளித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையுலகில் உள்ள பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி நடிகை வரலட்சுமி 'சேவ் சக்தி' என்ற அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com