சிலசமயம் உலகை தலைகீழாக பார்ப்பது நன்று: வரலட்சுமியின் வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,February 21 2022]

சில சமயம் இந்த உலகை தலைகீழாக பார்ப்பது நல்லது என்ற கேப்ஷனுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ்சினிமாவின் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தால் பராசக்தி, கலர்ஸ், யானை, யசோதா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் வரலட்சுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உண்டு என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் யோகா செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் இதனை அடுத்து யோகா பயிற்சியாளருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் தலைகீழாக நின்று யோகா செய்யும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி இந்த வீடியோவின் கேப்ஷனாக பதிவு செய்திருப்பதாவது:

முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள்!!!!
சில சமயங்களில் உலகையே தலைகீழாகப் பார்ப்பது நல்லது.!!
என்னை மீண்டும் யோகாவிற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி
என்னை இதைச் செய்ய வைத்த பயிற்சியாளருக்கு நன்றி
 

More News

காதலிப்பது உண்மையா? தீயாய் பரவும் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஹிருத்திக் ரோஷன்

80 கிலோ வெயிட்டை தூக்கி செம மாஸ் காட்டும் பிரபல நடிகை… வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகைககள் என்றாலே ஃபிட்னஸ் ஃப்ரீக்காக இருக்க வேண்டும்

படப்பிடிப்பின் இடையே 'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஹீரோ-ஹீரோயின்!

படப்பிடிப்பின் இடையில் தமிழ் சினிமாவின் ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவரும் 'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா: கமல், ரஜினி நேரில் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா

95 வயது இங்கிலாந்து ராணியாருக்கு கொரோனா பாதிப்பு!

இங்கிலாந்து மகாராணியார் 2ஆம் எலிசபெத்துக்கு கொரோனா