உங்க வேலையை முதலில் சரியா பாருங்க! பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியின் அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் நடிகை வரலட்சும் கலந்து கொண்டு சமீபத்தில் தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது ஒரு நிருபர், 'வெற்றி பெற்ற பின்ன்ரே அவரை பாராட்டுகின்றீர்கள், இதுபோன்ற திறமைசாலிகளை ஏன் முன்கூட்டியே அறிந்து அவர்களுக்கு உதவுவதில்லை' என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி, 'பத்திரிகையாளர்களான நீங்களே வெற்றி பெற்ற பின்னர்தானே கோமதியை தலைப்பு செய்தியில் போட்டீர்கள். நீங்கள் தான் இதுபோன்ற திறமைசாலிகளை செய்தியின் மூலம் வெளியே கொண்டு வரவேண்டும். சினிமா ஆடியோ விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நீங்கள் தான் இதற்கும் தர வேண்டும், அப்படி செய்தால்தான் திறமையானவர்கள் வெளியே தெரிவார்கள். எனவே உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்' என்று கூறினார்.

அதேபோல் இன்னொரு நிருபர் 'கோமதிக்கு நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்' என்று கேட்க அதற்கு வரலட்சுமி 'இதுவரை எதுவும் செய்யவில்லை இனிமேல் தான் செய்யணும் கூறிவிட்டு, 'என்னை கேள்வி கேட்கின்றீர்களே, நீங்கள் என்ன செய்தீர்கள் கோமதிக்கு என்று எதிர்கேள்வி கேட்டார். எதுவும் செய்யலைல்ல..அப்புறம் ஏன் என்னை மட்டும் கேள்வி கேட்கின்றீர்கள்? என்று மீண்டும் பதிலடி கொடுத்தார்.

More News

8 பேர் பலி, பல ஆயிரம் கோடி சேதம்: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிஷா!

நேற்று ஒடிஷா மாநிலம் வழியே கரையை கடந்த ஃபானி புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை உருக்குலைய செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தும் மறுகூட்டலுக்கு சென்ற மாணவி!

தேர்வு முடிவுகள் வரும்போது பாஸ் ஆகிவிட்டாலே மாணவர்கள் திருப்தி அடைந்து கொள்வார்கள். மொத்த மதிப்பெண்கள் குறித்து கவலைப்படவே மாட்டார்கள்.

3 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கில் பொருட்சேதம்; கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல்

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிதீவிர புயலாக உருவாகியதால் இந்த புயல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி பைக்கில் செல்லும் இளம்ஜோடி: வைரலாகும் வீடியோ

பைக்கில் செல்லும் ஒருசில இளைஞர்கள் படுவேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமலும் செல்வதால் பலவிபத்துக்களை சந்திக்க நேர்கிறது.

சாலையின் குறுக்கே விழுந்த பிஎஸ்என்எல் டவர்: ஃபானி புயலின் கொடூர காட்சிகள்

இன்று காலை ஒடிஷா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் கணக்கிட முடியாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. புயல் காரணமாக வீசிய பயங்கர சூரைக்காற்றில்