தடுப்பூசி ஒரு ஹெல்மெட் மாதிரி: டபுள் ஆக்சனில் கலக்கும் வரலட்சுமியின் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டபுள் ஆக்ஷனில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
மொபைல்போனில் உரையாடல் நடக்கும் இந்த வீடியோவில் ’தடுப்பூசி போடவில்லை என்று ஒரு வரலட்சுமி கேட்க அதற்கு இன்னொரு வரலட்சுமி ’தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்று கூறுகிறார்கள், அது மட்டுமின்றி இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிக்கிறது என்று கூறுகிறார்.
அதற்கு முதல் வரலட்சுமி ’தடுப்பூசி என்பது ஒரு ஹெல்மெட் போன்றது என்றும் ஹெல்மெட் போட்டவர்களுக்கு விபத்துகள் ஏற்படாது என்பது உறுதி அல்ல என்றும் ஆனால் விபத்துக்கள் ஏற்பட்டால் உயிர் பிழைத்து விடுவார்கள் என்றும் அதேபோல்தான் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்பது உறுதி அல்ல என்றும் ஆனால் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் கூறுகிறார். இதனை அடுத்து மறுமுனையில் இருக்கும் வரலட்சுமி நாளைக்கே நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
#GetVaccinated avoid rumours
— ?????????????????? ?????????????????????? (@varusarath5) June 4, 2021
I’ve got mine.. Have you got yours..??
Take the vaccine Beat corona #tamil version @chennaicorp @rdc_south @BabuVijayB pic.twitter.com/UFwsg5kmgB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments