வரலட்சுமிக்கு கொரோனாவா? இந்த வீடியோவை பார்த்தா யாரும் நம்ப மாட்டாங்க!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வரலட்சுமி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் அவருக்கு கொரோனா பாதிப்பு என்று யாரும் நம்ப மாட்டார்கள் என கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வீட்டிலிருந்து வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் வரலட்சுமி ஆட்டம் போடும் வீடியோவும் அவருடன் சேர்ந்து அவருடைய செல்ல நாய்க்குட்டியும் ஆட்டம் போடும் காட்சியும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோவுக்கு ராதிகா உள்பட பலர் லைக் செய்துள்ள நிலையில் உண்மையில் இந்த வீடியோவை பார்த்தால் வரலட்சுமிக்கு கொரோனா என்று யாரும் நம்ப மாட்டார்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ் அதிகம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Covid Positive..inspite of all precautions..actors plz start insisting on masking up the entire crew bcos we as actors cant wear masks..
— ?????????????????? ?????????????????????? (@varusarath5) July 17, 2022
Those who have met me or been in contact with me plz watch out for symptoms and get checked..
Plz be careful and mask up..covid is still here pic.twitter.com/MyegWOSQ5a
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments