'விவிவி' கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி கதை வசனம் எழுதும் ஒரு படத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் யுவன்ஷங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகிய மூவரும் இணையும் இந்த 'விவிவி' கூட்டணிக்கு இன்னொரு 'வி' நட்சத்திரமான வரலட்சுமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் 18வது படமாக உருவாகவிருக்கும் இந்த படம் குறித்து நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'இந்த படம் குறித்த செய்தி அறிந்த மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை சஞ்சீவி இயக்கி வருகிறார். இவர் விஷ்ணுவிஷாலின் சகோதரர் என்பதும் இதற்கு முன் இவர் விக்ராந்த் நடித்த 'தாக்க தாக்க' படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் விஜய்சேதுபதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த படத்தில் விஜய்சேதுபதி எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Special thanks to @thisisysr sir???? n our big support @thanga18 sir???? pic.twitter.com/9VE5spq9D9
— Vikranth Santhosh (@vikranth_offl) June 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments