'லியோ' படத்தில் வனிதா மகன் நடித்திருக்கிறாரா? வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வனிதாவின் மகன் ’லியோ’ படத்தில் நடித்திருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் என்னுடைய மகன் நடித்து இருப்பதாக நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்
தான் ‘லியோ’ இல்லை என்று அர்ஜுனிடம் விஜய் கூஉம் காட்சியில், ஒரு சில புகைப்படங்களை காண்பிப்பார். அப்போது அவர் தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படத்தை காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் விஜய்யின் ஒரு வயது மகனாக இருப்பது வனிதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வனிதா தன்னுடைய சமூக வலைதளத்தில் ’என்னுடைய மகன் தான் விஜய்யின் மகனாக ’லியோ’ படத்தில் நடித்துள்ளார், அதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
வனிதாவின் மகன் ஏற்கனவே கார்த்தி நடித்த ’சகுனி’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் அவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com