கர்ப்பிணியாக நடிகை வனிதா: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை வனிதா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படம் ’வாசுவின் கர்ப்பிணிகள்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் மருத்துவராக விஜய் டிவி ’நீயா நானா’ கோபிநாத் நடித்துள்ளார்..

இந்த நிலையில் இந்த படத்தின் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை வனிதா ‘பல்லவி’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படும் இந்த போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவி பிரகாஷ் நடித்த ’பென்சில்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவின் மோகன் சித்தாரா இசையில், பிகே வர்மா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

என் முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகள் கழித்து நடிக்கின்றேன்: நடிகை மீனா

32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் ஹீரோவுடன் மீண்டும் நடிக்கிறேன் என நடிகை மீனா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இவள் உருவில் இறந்த என் தங்கையை பார்க்கிறேன்: 'குக் வித் கோமாளி' ஷகிலா நெகிழ்ச்சி

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளி ஒருவரை சுட்டிக்காட்டி இவளுக்காக தான் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் என்றும் இவள் இறந்த என் தங்கையை போல் இருக்கிறார்

ஆர்ஜே பாலாஜியை அடுத்து புளுசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த 'மாமனிதன்' இயக்குனர்!

சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' படத்தை கடுமையாக விமர்சனம் செய்த புளுசட்டை மாறனுக்கு ஆர்ஜே பாலாஜி பதிலடி கொடுத்தார் என்பதை பார்த்தோம்.

முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பிரபல தமிழ் இயக்குனரின் மகன்: குவியும் பாராட்டுக்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரின் மகன் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான நிலையில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துள்ளார். இதனை அடுத்து

'என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை': தன்னுடைய செய்திக்கு டுவிட் போட்ட ராஷ்மிகா!

ஊடகங்களில் வெளியான தன்னுடைய செய்தியை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் 'இந்த செய்தியை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை' என ராஷ்மிகா மந்தனா பதிவு செய்திருப்பது