மீண்டும் காதல்? வனிதா இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு!

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பீட்டர்பாலை பிரிந்தது ஏன் என்பது குறித்து வனிதா தனது தரப்பிலிருந்து நீண்ட விளக்கத்தை அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மீண்டும் பீட்டர் பாலுடன் வாழ வனிதா ஆசைப்பட்டதாகவும் ஆனால் பீட்டர்பால் தான் அவரை நிராகரித்து விட்டதாகவும் வதந்திகள் வந்தன.

இந்த வதந்திகள் குறித்து கருத்து தெரிவித்த வனிதா, ‘இதுவரை என்னை யாரும் நிராகரித்தது இல்லை, நான் தான் நிராகரித்து இருக்கிறேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது. எனவே இது போல் யூகிப்பதையும் விவாதிப்பதியும் தயவு செய்து நிறுத்துங்கள். எனக்கு பீட்டர் பாலுடன் சட்ட ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் என் வழியில் வலியை சுமந்து கொண்டு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என்று பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார். இதனை அடுத்து வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த பதிவுக்கு கமெண்ட் பகுதியையும் அவர் ஆஃப் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.