ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை ஊர்வசி ரௌடாலா பெற்றுள்ளார்.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரௌடாலா, பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அளிக்கும் கோல்டன் விசா தனக்கு கிடைத்துள்ளதாகவும் இந்த விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும், இந்த விசா 12 மணி நேரத்தில் தனக்கு கிடைத்துள்ளதாகவும் ஊர்வசி தெரிவித்துள்ளார். இது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய மரியாதை என்றும் இதனை அடுத்து ஐக்கிய அமீரக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் அளிக்கும் கோல்டன் விசா என்பது அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களுக்கு அந்நாட்டு அரசு அளித்து வருகிறது. இந்த விசா பத்தாண்டுகளுக்கு செல்லும் என்றும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பித்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இந்த விசா வைத்து இருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன் போலவே அந்நாட்டில் கெளரவப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களுக்கு கோல்டன் விசா அளித்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், தற்போது ஊர்வசி ரௌடாலாவுக்கு அளித்து உள்ளது என்பதும் இந்த விருதை பெறும் முதல் இந்திய நடிகை இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.