முதல்முறையாக மகள், மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

தமிழ் சினிமாவில் கடந்த 80 கள் மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஊர்வசி தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன் முதலாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

கே பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. அதன் பிறகு அவர் கமல்ஹாசன் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ ’அந்த ஒரு நிமிடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட அவர் பிஸியாக உள்ளார் என்பதும் ’யானை முகத்தான்’ உள்பட ஐந்து படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி மலையாள நடிகர் ஜெயன் என்பவரை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2001 ஆம் ஆண்டு தேஜா லட்சுமி என்ற மகள் பிறந்தார். இதனை அடுத்து ஜெயனை விவாகரத்து செய்த ஊர்வசி பின்னர் சென்னை சேர்ந்த சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் முதன் முதலாக தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

2வது முறையாக கர்ப்பமான தமிழ் நடிகரின் மனைவி.. ரசிகர்கள் வாழ்த்து..!

 பிரபல தமிழ் நடிகருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி.. உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த த்ரில் கதை அம்சமுள்ள படங்களில் ஒன்று 'ராட்சசன்' என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

திருமணத்திற்கு பிறகு ஸ்லிம் பியூட்டியான நடிகை மஞ்சிமா மோகன்… வைரல் புகைப்படம்!

நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை மஞ்சிமா மோகன்

என்னுடைய கணவர் இசையில் என்னை கவனம் செலுத்தவிடவில்லை - வைக்கோம் விஜயலட்சுமி

பிரபல பாடகி வைக்கோம்  விஜயலட்சுமி தன்னுடைய விவாகரத்து குறித்து நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் .

காதல் தேசம் ‘நடிகை தபு‘வா இவர்? 50 வயதைக் கடந்தும் ஹாட் புகைப்படம் வைரல்!

50 வயதான பிறகும் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாகவும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்து வருபவர் நடிகை தபு