தனுஷ்-சிம்பு பட நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'பொல்லாதவன்', மற்றும் சிம்பு நடித்த 'குத்து' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் முன்னாள் எம்பியுமான ரம்யா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திரமோடியை 'திருடன்' என்று விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவர் மீது தேசியத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ரம்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதை அடுத்து அவர் மீது உபி மாநிலத்தை வழக்கறிஞர் ஒருவர் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளார்.
அந்த வழக்கறிஞர் தனது புகாரில் ரம்யாவிடம் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய புகாரை நீக்கும்படி தான் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments