'சர்கார்' விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் முன்னாள் குழந்தை நட்சத்திரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் நடித்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. அவர்தான் நடிகை துளசி.
'சங்கராபரணம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த துளசி அதன் பின் கமல்ஹாசனின் 'சகலகலாவல்லவன்' முதல் சமீபத்தில் வெளியான கீர்த்திசுரேஷின் 'நடிகையர் திலகம்' வரை பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது முதல்முறையாக விஜய் படத்தில் அதிலும் அவருக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை சர்கார்' படத்தில் பெற்றுள்ளார் நடிகை துளசி.
விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை துளசி கூறியபோது, 'சர்கார்' படப்பிடிப்பின்போது தன்னை விஜய் 'அம்மா' என்று தான் அழைப்பார் என்றும் அவருடைய சொந்த அம்மாவுக்கு கொடுக்கும் மரியாதையை தனக்கு கொடுத்ததாகவும், அவருடைய ஒவ்வொரு செயலும் தன்னை நெகிழ வைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய மகன் சாய் குறித்து அதிகம் விஜய் விசாரித்ததாகவும், ஒரு நல்ல இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமாவை கற்றுக்கொள்ள எனது மகனுக்கு அவர் அறிவுரை கூறியதாகவும், விஜய்யுடன் நடித்த நாட்களை தன்னால் மறக்கவே முடியாது என்றும் நடிகை துளசி மனம்திறந்து கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments