முதல்முறையாக 'நெகட்டிவ்' வார்த்தை கேட்டு சந்தோஷம் அடைகிறேன்: த்ரிஷா டுவிட்

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

முதல் முறையாக நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு சந்தோஷம் அடைகிறேன் என நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா வைரஸ் நோயிலிருந்து முழுமையாக குணமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இதற்கு முன் நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு நான் சந்தோசம் அடைந்ததே இல்லை என்றும் முதல் முறையாக கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் என்ற செய்தி கேட்டு சந்தோஷமடைந்தேன் என்றும் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை தெரிவித்துள்ளார். மேலும் தான் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டை சுறுசுறுப்புடன் சந்திக்க தயாராகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து கூறி ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா, ’பொன்னியின் செல்வன்’ உள்பட ஐந்து திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அந்த படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.