close
Choose your channels

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்..!

Sunday, October 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவும் கலந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை த்ரிஷா வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த ’தி ரோட்’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். எதிர்பாராத காரணத்தால் ‘தி ரோட்’ வெளியாகும் போது என்னால் ஊரில் இருக்க முடியவில்லை. நான் வெளிநாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.

இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த விமர்சகர்கள், இணையதளங்கள் பத்திரிகைகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த படம் வெற்றி என்ற செய்தி கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தின் விமர்சனம் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் நிலையில், எல்லாவற்றையும் நானே நேரடியாக படிக்கிறேன், ஒவ்வொன்றையும் படிக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படம் வெளியாகும்போது நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது, ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு வேலை வந்துவிட்டது. இருப்பினும் அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment