2 பாகங்களில் த்ரிஷாவின் த்ரில் படம்.. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ராம்’. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
மோகன்லால், த்ரிஷா, சம்யுக்தா மேனன், சாய் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 25 நாட்கள் துனிஷியா, 10 நாட்கள் பிரிட்டன் மற்றும் 10 நாட்கள் டெல்லியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை த்ரிஷா, விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments