நடிகை த்ரிஷாவின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய்யுடன் அவர் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் த்ரிஷா தான் நாயகி இன்று கூறப்படுகிறது. மேலும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த்ரிஷா நடித்துள்ள ’தி ரோடு என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இந்த படத்திற்கு ’ஐடென்டிட்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை போஸ்டர் உடன் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Totally pumped to associate with this squad in a high octane action entertainer🤩🙏🏻@ttovino #akhilpaul #anaskhan #identity pic.twitter.com/4qb8Qbksbh
— Trish (@trishtrashers) July 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com