'நாயகி' படத்திற்காக த்ரிஷா எடுத்த புது அவதாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பத்து வருடங்களுக்கும் மேல் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக விளங்கி வரும் த்ரிஷா முதன்முதலில் 'நாயகி' படத்தில் பேயாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'அரண்மனை, மாயா வரிசையில் மற்றொரு முன்னணி நடிகை பேயாக நடிக்கவுள்ள இந்த படமும் காமெடி கலந்து பேய்ப்படம் என கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து நடிகை த்ரிஷா கூறியப்பொது, 'இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம். கோவியின் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர் கிரிதரன் என்னிடம் கூறியபோது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'நாயகி' கேரக்டரால் ஈர்க்கப்பட்ட நான், உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி முதன்முதலாக ஒரு பாடலையும் பாடியுள்ளேன். எனது புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்து பாடுவது குறித்து பரிசீலனை செய்வேன். ஏற்கனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் உள்பட பலர் பாடி வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது த்ரிஷாவும் சேர்ந்து தனது புது அவதாரத்தை தொடங்கியுள்ளார்.
தெலுங்கில் பூரி ஜெகந்நாத் அவர்களின் பல படங்களுக்கு இசையமைத்துள்ள ரகு என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். அவர் என்னிடம் உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கின்றது. அதனால் ஒரு புரமோஷன் பாடலை நீங்களே பாடுங்கள் என்று கேட்டு கொண்டதை அடுத்து இந்த படத்தின் பாடலை பாட சம்மதித்துள்ளேன். இந்த படம் 90% காமெடியாகவும், 10% திகிலாகவும் இருக்கும்' என்று த்ரிஷா கூறியுள்ளார். இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஆறு வருடங்களுக்கு இதே ஜோடி நடிப்பில் 'அபியும் நானும்' என்ற வெற்றிப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments