த்ரிஷாவின் அடுத்த பட திகில் தலைப்பு

  • IndiaGlitz, [Saturday,May 28 2016]

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா, இன்றைய இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள 'கொடி' மற்றும் 'நாயகி' ஆகிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் மீண்டும் ஒரு த்ரில் படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
விஜய் நடித்த 'மதுர', பிரசாந்த் நடித்த 'சாக்லேட்' ஆகிய படங்களை இயக்கியவரும் ஷங்கரின் உதவியாளராக இருந்தவருமான இயக்குனர் மாதேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது 'மோஹினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.
'நாயகி' படம் போலவே இந்த படமும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பது இந்த படத்தின் டைட்டிலில் இருந்தே தெரியவருகிறது. சூர்யாவின் சிங்கம் 2', படத்தை தயாரித்த லக்ஷ்மண் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.