ஜக்கி வாசுதேவ் உடன் நடிகை த்ரிஷா சந்திப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

பிரபல நடிகை த்ரிஷா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அஜித் குறித்து பேட்டியளித்து தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார். மேலும் அந்த பேட்டியில் அவர் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு அரபு நாடுகளை போல் கடுமையான சட்டங்கள் இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார் த்ரிஷாவின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் ஈஷா ஜக்கி வாசுதேவ் அவர்களை சந்தித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் அவர்களை இன்று நடிகை த்ரிஷா சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆன்மீக ஒரு மிகச்சிறந்த விஷயம். அத்தகைய அத்தகைய ஒரு தெய்வீக அம்சம் உள்ள குருவை இன்று சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று த்ரிஷா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜக்கி வாசுதேவுடன் த்ரிஷா எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.