நியூயார்க் நகர வீதியில் ஜாலியாக சைக்கிள் ரைடிங் செல்லும் த்ரிஷா .. க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

நடிகை த்ரிஷா தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு நியூயார்க் நகர வீதியில் சைக்கிள் ரைட்டிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

நடிகை த்ரிஷா தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அவர் நியூயார்க்கில் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக த்ரிஷா நியூயார்க் நகர வீதியில் அவர் சைக்கிள் ஓட்டும் வீடியோ க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை அவர் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்கள் ஆகியுள்ள நிலையில் சுமார் 4 லட்சம் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா, விஜய் உடன் நடித்த ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி-லோகேஷ் இணையும் ‘தலைவர் 171’ கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் ’கமல் 234’ உள்பட ஒரு சில படங்களிலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் அக்டோபர் 20ஆம் தேதி த்ரிஷா நடித்த ‘தி ரோடு’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.