10 வயதில் பிசினஸ் ஆரம்பித்த விஜய் பட நடிகையின் மகன்: முதல் தயாரிப்பை வாங்கிய நடிகை!
- IndiaGlitz, [Monday,August 29 2022]
பிரபல நடிகை ஒருவரின் மகன் 10 வயதில் பிசினஸ் தொடங்கியுள்ள நிலையில் அந்த பிசினஸில் தயாராகிய முதல் தயாரிப்பை நடிகை வாங்கி அவரை ஊக்குவித்து உள்ளார்
பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ மற்றும் விஜய் நடித்த ’குஷி’ ஆகிய ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் ஐபிஎல் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் என்பதும் அதுமட்டுமின்றி பல பிசினஸ்களில் நிலையில் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பத்து வயது மகன் விஷான் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளதாக ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். VRKICKS என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மூலம் பிரத்தியேகமான ஷூக்கள் தயாரித்து விஷான் விற்பனை செய்து வருகிறார்
இவ்வளவு சின்ன வயசிலேயே தொழிலதிபரான தனது மகனை ஊக்குவிக்கும் விதத்தில் தனது மகன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் ஷூவை ஷில்பா ஷெட்டியே வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருடைய மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த பதிவில் ஷில்பா ஷெட்டி கூறியிருப்பதாவது: சிறு குழந்தைகளும் அவர்களின் பெரிய கனவுகளும் எப்போதும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த தொழிலின் முயற்சி, யோசனை மற்றும் கருத்து, வடிவமைப்புகள் அனைத்தும் அவர்தான்! தொழில்முனைவோர்கள்க்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த இளமைப் பருவத்தில் கிடைக்கும் வருமானத்தில் சிலவற்றைத் தொண்டு நிறுவனத்திற்காக வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அவருக்கு வயது வெறும் 10! இந்த தலைமுறை அம்மாவை ஆச்சரியப்படுத்தியுள்ளார்! மிகவும் பெருமை! ல் தி பெஸ்ட், என் மகனே’ என்று பதிவு செய்துள்ளார்.