தமிழில் பேசட்டுமா? இந்தி நிருபரை அதிர வைத்த நடிகை டாப்ஸி
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் நேற்று பிரபல நடிகை டாப்சி கலந்து கொண்டார். அதில் அவர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒரு இந்தி நிருபர், ‘ இந்தியில் பேசுங்கள் என்று கோரிக்கை எழுப்பினார். இதனையடுத்து அவர் இங்கு உள்ள அனைவருக்கும் ஹிந்தி புரிகிறதா? என்று கேள்வி எழுப்ப பலரும் புரியவில்லை என்று பதிலளித்தனர். இதனை அடுத்து அவர் தொடங்கிய தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மீண்டும் அதே நிருபர் ’நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை எனவே ஹிந்தியில் தான் பேச வேண்டும்’ என்று கூற அதற்கு டாப்ஸி, ‘நான் பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் நான் நடித்து உள்ளேன். அதனால் நான் தமிழில் பேசட்டுமா? என்று கேட்க அந்த நிருபர் அதன் பின்னரே அமைதியானார்.
இதனை அடுத்து பார்வையாளர்கள் எழுப்பிய ஒரு சில கேள்விகளை அவர் சுட்டிக்காட்டி’பார்வையாளர்களிடமிருந்து இன்னும் சிறந்த கேள்வியை எதிர் பார்க்கிறேன் என்று கூறி அதிர வைத்தார். டாப்ஸியின் இந்த பதில்கள் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தென்னிந்திய சினிமாவை தான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு விட்டுக் கொடுத்தால் நான் முட்டாளாக இருப்பேன் என்றும் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பணியாற்றுவேன் என்றும் தென்னிந்திய சினிமாவை பாலிவுட்டுக்கு படிக்கட்டாக நான் என்றுமே நினைத்ததில்லை என்றும் கூறினார்.
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ஒரு சில படங்கள் மட்டுமே நடத்த தென்னிந்தியாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி தென்னிந்திய மொழிப் படங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளிக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com