அம்பானி குடும்ப திருமணத்திற்கு ஏன் செல்லவில்லை.. நடிகை டாப்சி விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகின் பல பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.
தமிழ் திரையுலகில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார் என்பதும், அதேபோல் அட்லி தனது மனைவி ப்ரியா உடனும், விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடனும் சென்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
அதேபோல் பாலிவுட் திரை உலகளவில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகை டாப்ஸி உட்பட சில பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விளக்கம் அளித்த போது ’எனக்கு தனிப்பட்ட முறையில் அம்பானி குடும்பத்தினரை தெரியாது. எனக்கும் அவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
திருமணம் என்பது உறவுகளோடு கூடியது, விருந்து அளிக்கும் குடும்பத்திற்கும், விருந்தினர்களின் குடும்பத்திற்கும் இடையே ஒரு விதமான உறவு பந்தம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட திருமணங்களுக்கு மட்டுமே நான் செல்வேன்’ என்று கூறியுள்ளார். டாப்ஸியின் இந்த பதிலுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments