close
Choose your channels

நான் இன்னும் கர்ப்பமாகவில்லை, அதனால் திருமணம் இப்போது இல்லை: தமிழ் நடிகை 

Wednesday, July 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் இன்னும் கர்ப்பமாகவில்லை அதனால் திருமணம் இப்போதைக்கு இல்லை என தமிழ் நடிகை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு சுவாரசியமான பதில் அளித்து கொண்டிருந்த டாப்சி ’எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று ஒரு ரசிகரின் கேள்விக்கு ’நான் இன்னும் கர்ப்பமாகவில்லை, அதனால் இப்போது என் திருமணம் இருக்காது, திருமணம் நிச்சயம் ஆகும்போது உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை டாப்ஸி, பேட்மிட்டன் பயிற்சியாளர் மதியாஸ் போ என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment