close
Choose your channels

தனுஷ் நாயகியின் காதலர் இவர்தான்: வெளியானது புகைப்படம்

Monday, May 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்சி அதன்பின் ஒரு அஜித் நடித்த ‘ஆரம்பம்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்தார். தற்போது நடிகை டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சனுடன் டாப்ஸி நடித்த ’பிங்க்’ திரைப்படம் தான் தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற படமாக ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை டாப்சி வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலிப்பதாக பாலிவுட்டில் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை டாப்ஸி தற்போது தனது காதலை பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். தனது காதலர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு பேட்மிண்டன் வீரர் என்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலருடன் டாப்ஸி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காதலை தனது தாயார், சகோதரரி உட்பட தனது குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இந்த காதலை தாயாரும், சகோதரியும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த காதலுக்கு அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் டாப்ஸியின் தாயார், ‘டாப்ஸியை தாங்கள் முழுமையாக நம்புவதாகவும் அவர் யாரை தேர்வு செய்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காதலருடன் நடிகை டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment