திருமணத்திற்கு பின்னரும் உள்ளாடை விளம்பரம்.. நடிகை டாப்ஸிக்கு குவியும் கோடிகள்..!

  • IndiaGlitz, [Thursday,May 23 2024]

நடிகை டாப்ஸி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அவர் உள்ளாடை விளம்பரத்தில் நடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட் பதிவாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்ஸி அதன் ’வந்தான் வென்றான்’ ’வை ராஜா வை’ ’காஞ்சனா 2’ ’ஆரம்பம்’ உட்பட சில தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் ’டங்கி’ திரைப்படத்தில் கூட அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் தற்போது அவர் மூன்று பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை டாப்ஸி எளிமையாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் டாப்ஸி அவ்வப்போது தான் நடித்து வரும் திரைப்படங்களின் வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தான் நடித்த உள்ளாடை விளம்பரத்தின் வீடியோவை சற்றுமுன் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் டாப்ஸி பணம் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னரும் உள்ளாடை விளம்பரம் தேவையா? என்று ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவு செய்தாலும் பலர் பாசிட்டிவ் ஆக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More News

துபாய் சென்ற ரஜினிக்கு இன்னொரு சர்ப்ரைஸ்.. ஐக்கிய அரபு அமீரக அரசு செய்த கெளரவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார் என்றும் அங்கு அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அமீரக அரசு ரஜினிக்கு செய்த

'கல்கி 2898 ஏடி' படத்திற்காக சென்னையில் செய்யப்பட்ட கார்.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்..!

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' என்ற திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

'ராயன்' செகண்ட் சிங்கிள் பாடலை பாடியது பிரபல இசையமைப்பாளரா?  சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்' என்ற திரைப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்.. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி கதையா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி

2 வருட பயிற்சி.. தோள்பட்டை வலி.. ஒரு திரைப்படத்திற்காக இந்த அளவு ரிஸ்க் எடுத்தாரா ஜான்வி கபூர்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு திரைப்படத்திற்காக இரண்டு வருடங்கள் பயிற்சி மற்றும் தோள்பட்டையில் வலி ஆகியவற்றை அனுபவித்ததாக கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.