என்ன ஒரு அழகு.. நடிகை தமன்னாவின் யோகா புகைப்படங்கள் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சர்வதேச யோகா தினத்தில் நடிகை தமன்னா யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் என்ன அழகாக யோகா செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் பல நடிகர் நடிகைகள் யோகா செய்யும் புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்
அந்த வகையில் நடிகை தமன்னாவும் யோகா செய்யும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக், கமெண்ட் குவிந்து வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
யோகா செய்யும் போது ஒரு சமநிலையை கண்டறிந்தேன். எனக்கு நீண்ட காலமாக யோகா என்பது சரியாக புரியாமல் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அனைத்தும் மாறியது. சத்குரு அவர்களின் போதனை மூலமாகவும் ஈஷா பவுண்டேஷனுக்கு நான் சென்றபோதும் யோகாவின் உண்மையான நோக்கத்தை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு சிக்கலான பயிற்சி மிகவும் எளிமையாக சொன்னால் அதை நாம் செய்யும்போது ஒரு புதிய உலகம் திறப்பதை காண முடியும். நான் என்னுள் மறைந்திருக்கும் ஆற்றல்களை உணரவும், ஆராயவும், யோகா மூலம் கற்றுக் கொண்டேன்.
இன்று யோகாவின் ஒவ்வொரு பயிற்சியும் என்னை சுய கண்டுபிடிப்பின் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. மூச்சு, மனம் மற்றும் ஆவி இடையே உள்ள சிக்கலான தொடர்பை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் யோகாவின் உண்மையான திறனை கொண்டாடுவதற்கு நாம் ஒரு நாள் மட்டும் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகிறேன்
அனைவருக்கும் எனது சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள், உங்கள் முழு திறனையும் யோகா மூலம் வெளிப்படுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments