பிளாக்பஸ்டர் வரவேற்பு பெற்ற 'நவம்பர் ஸ்டோரி': நன்றி தெரிவித்த தமன்னா
- IndiaGlitz, [Thursday,May 27 2021]
பிரபல நடிகை தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான வெப்தொடர் ’நவம்பர் ஸ்டோரி’. இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இத்தொடரின் குழுவினர் குறிப்பாக தமன்ன்னா தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.
மிகப்பிரபலமான மற்றும் அதிரடிப் பார்வையாளர்கள் பதிவுகளைத் தாண்டி, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சமீபத்திய க்ரைம் த்ரில்லர் 'நவம்பர் ஸ்டோரி' கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை தமன்னா மற்றும் ஜி.எம்.குமாரின் தந்தை-மகள் பாசம், அனுராதா மற்றும் கணேசனாக இதில் வாழ்ந்துள்ளனர். இதன் ஆழமான கதை மற்றும் நச்சென்ற நடிப்பு, தமிழ் பார்வையாளர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சஸ்பென்ஸ் நிறைந்த க்ரிஸ்ப்பான கதை மற்றும் இதில் நடித்துள்ள நட்சத்திரங்களின் நடிப்பு பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
நவம்பர் ஸ்டோரியை மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்தத் த்ரில்லர் வெளியான இந்த வார இறுதியில் பார்த்துள்ளனர். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இதனை ராம் சுப்பிரமணியன் இயக்கி, ஆனந்த விகடன் குழுமம் தயாரித்துள்ளது. இது 7 அத்தியாயங்கள் கொண்டுள்ளது, இது தமிழ், இந்தி மற்றும் தெலுங்கிலும் கிடைக்கப்பெறுகிறது. இதில் புகழ்பெற்ற நடிகர்களான பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரில்லர் மிகப்பெரிய ஒரு வெற்றியை தேசிய அளவில் ஈட்டித்தந்துள்ளது. இது இந்தியாவின் தமிழ் டிஜிட்டல் தொடருக்கான ஒரு முக்கிய தருணத்தைக் உருவாக்கியுள்ளதைக் குறிக்கிறது.
நடிகை தமன்னா கூறுகையில், “நவம்பர் ஸ்டோரி' பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத்தந்த பாராட்டு மற்றும் அன்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்ட்டுடன் வழங்கப்படும்போது அதற்கு முழு அளவில் மக்கள் வரவேற்பை வழங்குவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும்போது, நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது' என்றார்.
இயக்குனர் ராம் சுப்பிரமணியன், “நவம்பர் ஸ்டோரி எனக்கு ஒரு கனவுப் படைப்பாகும். மேலும் நாம் உருவாக்கியதை பலர் ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதை விட சிறந்த உணர்வு வேறு எதுவும் இல்லை. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த குழுவினர், என்னை முழுவதும் நம்பிய தயாரிப்பாளர்கள் ஆகியோர்களால்தான் என்னுடைய இந்த இயக்குனர் கனவு முழுவதுமாக நிறைவடைந்து வெற்றியை எட்டமுடிந்தது. நாடு முழுவதும் மில்லியன்கணக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை அடைவது ஒரு எளிய சாதனையல்ல, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி. இதை மீண்டும் ஒரு முறை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. நவம்பர் ஸ்டோரியைப் பார்த்து கொண்டாடிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; இது ஒரு பெரிய வெற்றியை உருவாக்குகிறது, இது எனக்கு இன்னும் சிறப்பு என கூறினார்.
நவம்பர் ஸ்டோரி என்பது ஒரு தமிழ் க்ரைம் த்ரில்லர் தொடராகும், இது ஒரு தந்தை-மகள் உறவின் கதைக்களம், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இளம் கணினி ஹேக்கர் நெறிமுறையாளர் அனுராதா, அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளரான தனது தந்தை கணேசனை ஒரு பெண்ணின் இறந்த உடலுக்கு அருகாமையில் காண்கிறார். கொலை பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் அவர் இறங்கும்போது, யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் அறிகிறார். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் நவம்பர் ஸ்டோரி மர்மத் த்ரில்லரை காணாதவறாதீர்கள். இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி. மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.