நடிகை தமன்னாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பினார்கள் என்பது தெரிந்ததே
அந்த வகையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக அவர் வெப்தொடர் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவருக்கு திடீரென கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் என உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிகிறது
தமன்னாவுக்கு கொரோனா என்பதை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விரைவில் அவர் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com