'ஹரஹர மகாதேவ்'.. திடீரென ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த தமன்னா.. க்யூட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தமன்னா காசி விஸ்வநாத் கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவர் அஜித், விஜய், சூர்யா, விஷால், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’அரண்மனை 4’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு ஹிந்தி மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் தற்போது நடித்து பிசியாக இருக்கும் தமன்னா ஒரு வெப் தொடரிலும் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அவ்வப்போது ஆன்மீக சுற்றுப்பயணம் செய்யும் தமன்னா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசி விஸ்வநாத் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் ’ஹரஹர மகாதேவ்’ என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதை அடுத்த இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout