ஈஷா யோகா மையத்தில் ஜக்கியுடன் சிவராத்திரி நடனமாடிய தமன்னா.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும் என்பதும் இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் இந்த ஆண்டு ஈஷா யோகா மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்து கொள்ளும் நிலையில் இந்த ஆண்டும் அவர் கலந்து கொண்டார். அவர் ஜக்கி மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து சிவராத்திரி நடனம் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் ஆதியோகி சிலைக்கு முன் விடிய விடிய கண்விழித்து பிரார்த்தனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
தமன்னா மட்டுமின்றி நடிகை மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பல நடிகைகள் இந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tammy at Isha yoga center yesterday 😍 #TamannaahBhatia #Tamannaah pic.twitter.com/DE24SJWWwq
— Miss B fan(Tammu fan😘❣️) (@MissB_Fan) February 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments