ஈஷா யோகா மையத்தில் ஜக்கியுடன் சிவராத்திரி நடனமாடிய தமன்னா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

ஒவ்வொரு ஆண்டும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும் என்பதும் இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் இந்த ஆண்டு ஈஷா யோகா மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்து கொள்ளும் நிலையில் இந்த ஆண்டும் அவர் கலந்து கொண்டார். அவர் ஜக்கி மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து சிவராத்திரி நடனம் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் ஆதியோகி சிலைக்கு முன் விடிய விடிய கண்விழித்து பிரார்த்தனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமன்னா மட்டுமின்றி நடிகை மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பல நடிகைகள் இந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சில உறவுகளை விவரிக்க முடியாது': 'வாரிசு' பிரபலத்திற்கு விஜய் கொடுத்த முத்தம்..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது

80களின் கனவுக்கன்னி ஜெயமாலினி வீட்ல விசேஷம்.. பீச் ரிசார்ட்டில் பிரமாண்டமான ஏற்பாடு..!

 தமிழ் திரை உலகின் 80களின் கனவு கன்னியான ஜெயமாலினியின் ஒரே மகன் திருமணம் வரும் 23ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் நடைபெற இருப்பதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள்

கார்த்தியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

 கடந்த ஆண்டு கார்த்தி நடித்த 'பொன்னியின் செல்வன்', 'விருமன்' மற்றும் 'சர்தார்' ஆகிய மூன்று படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 'பொன்னியின் செல்வன் 2' மற்றும்' ஜப்பான்' ஆகிய படங்கள் வெளியாக

வீட்டில் நிகழ்ந்த துக்க சம்பவம்.. 'லியோ' படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய பிரபலம்..!

'லியோ' திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த டெக்னீசியின் ஒருவரது வீட்டில் நிகழ்ந்த துக்கம் காரணமாக உடனடியாக சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் தனுஷ்: பிரபல இயக்குனர் பாராட்டு..!

தாய் தந்தையர் வாழும் போதே அவர்களை சொர்க்கத்தில் வைத்து காக்கும் பிள்ளைகள் தெய்வமாக உணரப்படுகிறார்கள் என நடிகர் தனுஷை பிரபல இயக்குனர் சுப்பிரமணியன் சிவா தெரிவித்துள்ளார்.