கொரோனா எனக்கு மரண பயத்தை காட்டிடுச்சு: தமன்னா
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சையின் மூலம் குணமான நடிகை தமன்னா, கொரோனா தனக்கு மரண பயத்தை காட்டி விட்டதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமன்னா அதிலிருந்து குணமான பின் தற்போது ’11th ஹவர்’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப்தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா, கொரோனாவின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்
’கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது எனக்கு மரண பயம் இருந்துகொண்டே இருந்தது. என்னை போலவே அறிகுறிகள் இருந்த ஒரு சிலர் சிகிச்சையின் போதே உயிர் இழந்ததை நினைத்து நான் மிகவும் பயந்துவிட்டேன். ஆனால் நல்ல வேளை மருத்துவர்கள் என்னை காப்பாற்றி விட்டார்கள். எனக்கு எனது பெற்றோர்கள் பக்கபலமாக இருந்ததால் நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பதை அந்த நேரத்தில் நான் புரிந்து கொண்டேன்’ என்று கூறினார்
மேலும் மருத்துவ சிகிச்சையின் போது அதிக மருந்துகளை உட்கொண்டதால் நான் உடல் எடை அதிகமானேன். அதுகுறித்த புகைப்படத்தை நான் பகிர்ந்து கொண்ட போது பொதுமக்கள் சிலர் நான் குண்டாக இருப்பதைக் விமர்சனம் செய்தனர். ஒருவர் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதை புரிந்துகொள்ளாமல் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவர்கள் தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள்’ என்று ஆதங்கத்துடன் தமன்னா தெரிவித்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com