சுவிஸ் வந்துவிட்டு இதை மிஸ் பண்ணலாமா? நடிகை தமன்னா பதிவிட்ட வேறலெவல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா சுவிஸ்சர்லாந்து சென்றுள்ள நிலையில் அவர் இயற்கையோடு கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிரிப்பு எமோஜிகளை கமெண்ட்ஸ்களாகப் பதிவிட்டு அவரைப் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள தமன்னா பாட்டியா தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாக்களில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். முதல் முறையாக சூப்பர் ஸ்டாருடன் அவர் இணைந்து நடிப்பது குறித்து ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகை தமன்னா தமிழில் ‘அரண்மனை 4’ திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். இதேபோல ‘காத்து கருப்பு’, ‘ஏன் என்றால் காதல் என்பேன்’, திரைப்படத்திலும் தெலுங்கில் ‘தட் இஸ் மகாலட்சுமி’, ‘போலா சங்கர்’ திரைப்படத்திலும் இந்தியில் ‘போலே சூடியன்’ போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இப்படி தொடர்ந்து சினிமாவில் படு பிசியாக நடித்துவரும் நடிகை தமன்னா தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ள நிலையில் அங்குள்ள இயற்கையை ரசித்ததோடு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதில் வெள்ளைநிற பூவை ஊதி விளையாடும் நடிகை தமன்னாவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்மைல் எமோஜிகளை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.