மாலத்தீவில் அல்ட்ராசிட்டி பண்ணும் நடிகை தமன்னா… வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பான் இந்தியா நடிகையாக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இதனால் அங்குள்ள கடற்கரையில் இவர் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு “கேடி“ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா. அதற்குப் பிறகு “கல்லூரி“ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. இதனால் தொடர்ந்து விஜய்யுடன் “சுரா“, அஜித்துடன் “வீரம்“, கார்த்தியுடன் “பையா“, “சிறுத்தை“, சூர்யாவுடன் “அயன்“ என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார். அதேபோல தெலுங்கில் “பாகுபலி“ திரைப்படத்தில் செம கெத்தான நடிப்பைக் கொடுத்த இவர் அங்கும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் இந்தியிலும் நடிகை தமன்னாவிற்கு எப்போதும் மவுசு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு இந்திய சினிமாவில் முக்கியமான நபராக இருந்துவரும் இவர் தற்போது மாலத்தீவிற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஐஸ் வண்டியை ஓட்டிக்கொண்டு செம ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். மேலும் விதவிதமான காஸ்டியூம்களில் புகைப்படங்களை எடுத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து 15 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நடிகை தமன்னாவின் மாலத்தீவு புகைப்படங்கள் தற்போது 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் கமெண்டுகளையும் குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Thalaivi @tamannaahspeaks @ Maldives. #Tamannaah #TamannaahBhatia pic.twitter.com/FH3kJCMnnP
— Trends Tamannaah FC™ (@TrendsTamannaah) March 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments