காதல் தேசம் ‘நடிகை தபு‘வா இவர்? 50 வயதைக் கடந்தும் ஹாட் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
50 வயதான பிறகும் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாகவும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்து வருபவர் நடிகை தபு. இவர் தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
பாலிவுட்டில் 1982 இல் வெளியான ‘பஸார்’ எனும் திரைப்படத்தில் அடையாளமே தெரியாத கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்தான் நடிகை தபு. அதற்கு பிறகு துணை வேடங்களில் மட்டுமே நடித்துவந்த இவர் தமிழில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1996 இல் வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் ஹீரோயினாக மிரட்டியிருந்தார்.
சிரிக்காமலேயே தனது அழுத்தமான அழகால் அன்றைய இளைஞர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து இயக்குநர் மணிரத்தினத்தின் ‘இருவர்’ திரைப்படத்திலும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தார்.
அதோடு ‘சிநேகிதியே‘, ‘உருமி’, ‘டேவிட்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து ‘த்ரிஷயம்’ இந்தி ரீமேக் மற்றும் ‘கைதி’ இந்தி ரீமேக்கான ‘போலோ’ திரைப்படத்தில் நடிகை தபு நடித்து வருகிறார். 50 வயதைக் கடந்த பிறகும் முக்கிய கதாபாத்திரங்கள், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்று பாலிவுட்டில் கொடிகட்டி பறந்துவரும் நடிகை தபுவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை தபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடற்கரைக்கு அருகில் காற்று வாங்கிய படியே எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com