தேசிய விருது பெற்ற பிரபல நடிகைக்கு திருமணம்

  • IndiaGlitz, [Friday,December 14 2018]

பாலிவுட்டில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர்களின் திருமணம் வெகு சிறப்பாக நடந்த நிலையில் தற்போது இன்னொரு நடிகையின் திருமணமும் நடந்துள்ளது.

தமிழில் கருணாஸ் நடித்த 'சந்தமாமா', 'உதயா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் ஆகிய படங்களிலும் பல பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் ஸ்வேதாபாசு. இவர் தனது நீண்ட நாள் காதலரான ரோஹித் மிட்டலை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் புனேவில் நடந்ததாக ஸ்வேதாபாசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். புனேவில் பெங்காலி மற்றும் மார்வாரி முறைப்படி நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்

நடிகை ஸ்வேதாபாசு குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.